தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு ஆட்கடத்தலில் ஈடுபட்ட ஐவர் கைது!

france londonசொகுசுக் கப்­பல்­களை வாட­கைக்குப் பெற்று பிரித்­தா­னி­யா­வுக்கு குடி­யேற்­ற­வா­சி­களை கடத்­து­வதில் ஈடு­பட்ட 5 ஆட்­க­டத்­தல்­கா­ரர்கள் பிரான்ஸ் பொலி­ஸாரால் புதன்­கி­ழமை கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர்.
பிரான்­ஸி­லி­ருந்து குடி­யேற்­ற­வா­சிகள் புகை­யி­ரதம் மற்றும் லொறி­களைப் பயன்­ப­டுத்தி பிரித்­தா­னி­யா­வுக்குள் சட்­ட­வி­ரோ­த­மாக பிர­வே­சிப்­பது பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை கார­ண­மாக கடி­ன­மாக மாறி­யுள்­ளதால் ஆட்­க­டத்­தல்­கா­ரர்கள் மேற்­படி புதிய வழி­மு­றையைக் கையாண்டு ஆட்­க­டத்­தலில் ஈடு­பட்டு வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
இந்­நி­லையில் கைது­செய்­யப்­பட்­டுள்ள 5 ஆட்­க­டத்­தல்­கா­ரர்­களும் தமது ஆட்­க­டத்தல் செயற்­பா­டு­க­ளுக்­காக குறைந்­தது 20 சொகுசு கப்­பல்­களை வாட­கைக்கு பெற்றுப் பயன்­ப­டுத்தி வந்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.
அவர்கள், குடி­யேற்­ற­வா­சி­களை பிரித்­தா­னி­யா­வுக்கு அழைத்துச்செல்­வ­தற்கு அவர்கள் ஒவ்­வொ­ரு­வ­ரி­டமும் 5,500 ஸ்ரேலிங் பவு­ணுக்கும் அதி­க­மான தொகையை வசூ­லித்து வந்­துள்­ளனர்.
இந்­நி­லையில் புதன்­கி­ழமை இத்­தா­லிய, ஸ்பெயின் மற்றும் பிரித்­தா­னிய கடல் பரப்­பி­னூ­டாக அவர்­க­ளது சொகுசுக் கப்பல் பய­ணிப்­பதை கண்­கா­ணித்த அதி­கா­ரிகள், அந்தக் கப்பல் வட­மேற்கு பிரான்ஸில் பிரிட்­டானி பிராந்­தி­யத்­தி­லுள்ள செயின்ட் குவே போர்ட்­ரியக்ஸ் துறை­மு­கத்தை வந்­த­டைந்த வேளை அதில் பய­ணித்த 5 ஆட்­க­டத்­தல்­காரர்­க­ளையும் கைது­செய்­துள்­ளனர்.
அவர்­க­ளுடன் அந்தக் கப்­பலில் பிரித்­தா­னி­யா­வுக்குள் சட்­ட­வி­ரோ­த­மாகப் பிர­வே­சிக்கும் நோக்கில் புறப்­பட்ட 7 உக்­ரே­னி­யர்கள் இருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.
அந்த உக்­ரே­னி­யர்கள் அனை­வ­ரையும் நாட்­டி­லி­ருந்து வெளி­யேற்ற நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. அவர்கள் மீது குற்­றச்­சாட்டு எதுவும் சுமத்­தப்­ப­ட­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
இத­னை­ய­டுத்து மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணையில் நன்கு திட்­ட­மி­டப்­பட்டு செயற்­பட்டுவந்த அந்தக் குழு­வினர், 2014 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திலி ருந்து ஆட்கடத்தல்களை திரைமறைவில் மேற்கொண்டு வந்துள்ளமை கண்டறியப் பட்டுள்ளது. அவர்கள் கடந்த இரு வருட காலங்களில் குறைந்தது 20 சொகுசுக் கப்பல்களை வாடகைக்குப் பெற்று இந்த ஆட்கடத்தல் செயற்பாடுகளை மேற் கொண்டு வந்துள்ளனர்.

Comments
Loading...