தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிரான்சில் இருந்து விடுமுறைக்கு தாயகம் வந்த தாயும் மகளும் கைது

பிரான்ஸ் பிரஜைகளான தமிழ்ச் சிறுமியும், தாயும் நேற்றுக் காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு, 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.பிரான்ஸ் நாட்டிலிருந்து அண்மையில் விடுமுறையில் இலங்கை சென்றிருந்த சிறுமியும் தாயும் நேற்றுக் காலை பிரான்ஸ் நாட்டுக்கு திரும்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையம் சென்றிருந்தனர்.arrested

அவர்கள் இருவரும் விமானநிலையத்தில் பயணிப்பதற்கான சூட்கேஸ்களை ஒப்படைத்து விட்டு, போர்டிங் எடுப்பதற்கென அவர்களது கடவுச்சீட்டுக்களைக் கொடுத்தபோது விமான நிலையத்திலுள்ள புலனாய்வுப் பிரிவினரால் குறித்த தாயும் மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான தாய் பகீரதி என்றும், மகள் பகல்வி (8 வயது) என்றும் தெரிய வந்துள்ளது.

Comments
Loading...