தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிரான்சில் சிரியா தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த 4 பெண்கள் கைது!

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கடந்தாண்டு நடந்த குண்டு வெடிப்பில் அதே நாட்டைச் சேர்ந்த ராச்சித் காஸ்சிம் என்ற நபர் போலீசாரின் தேடப்பட்டுவரும் குற்றவாளியாக இருக்கிறார். அவர் தற்போது ஈராக்கில் உள்ள தீவிரவாதக் குழுவில் இயங்கி வரும் நிலையில், பிரான்சை சேர்ந்த இளம்பெண் ஒருவர் காஸ்சிம் செல்போனுக்கு ரகசியமாக குறுஞ்செய்திகள் அனுப்பி வந்துள்ளார்.

காஸ்சிம்-க்கு ரகசியமாக குறுஞ்செய்திகளை அனுப்பும் பெண்ணை கைது செய்த போலீசார், மேலும், சிரியாவில் உள்ள தீவிரவாதிகளுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பியது தொடர்பாக மூன்று இளம்பெண்களையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளம்பெண்கள் அனைவரும் 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

ஈராக் நாட்டில் வசித்து வரும் தீவிரவாதி காஸ்சிமை குறிவைத்து கடந்த மாதம் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலில் அவர் பலியாகியிருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments
Loading...