Designed by Iniyas LTD
பிள்ளையானுக்கு 3 மாதம் விடுமுறை : கிழக்கு மாகாண சபை அனுமதி!
கைதுசெய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், மாகாண சபையின் தற்போதைய உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு 3 மாத காலம் விடுமுறை வழங்க கிழக்கு மாகாண சபை அனுமதி வழங்கியுள்ளது.
நேற்று( செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற சபை அமர்வின்போது, பிள்ளையானுக்கு மூன்றுமாத கால விடுமுறை வழங்கும் பிரேரணையை ஐ.ம.சு.முன்னணி உறுப்பினரான கே.புஸ்பகுமார் கொண்டுவந்தார்.
குறித்த பிரேரணையை, மாகாண சபை உறுப்பினர் நாகலிங்கம் திரவியம் வழிமொழியப்பட்டதையடுத்து, அது மாகாண சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டு தடுப்புக் காவல் விசாரணையிலுள்ள பிள்ளையானுக்கு 3 மாத கால விடுமுறையளிக்க சபை அனுமதி வழங்கியுள்ளது.