தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிள்ளையான் மீண்டும் விளக்கமறியலில்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எதிர்வரும் ஜூலை மதம் 5 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே நீதவான் எம்.ஐ. இஸ்ஸதீன் பிள்ளையான் உள்ளிட்ட 5 பேரை விளக்கமறியல் வைக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...