Designed by Iniyas LTD
பீட்சா டெலிவரி செய்யும் ரோபோ
பிரபல பாஸ்ட் புட் நிறுவனமான டோமினோஸ் உலகிலேயே முதல்முறையாக பீட்சா டெலிவரி செய்ய ரோபோக்களை பயன்படுத்த உள்ளது.
பேட்டரியால் இயங்கும் இந்த ரோபோ 3 அடி உயரம் கொண்டது. ஊர்ந்து செல்லும் போது எதிரே வரும் வாகனங்கள் அல்லது ஆட்கள் மீது மோதாமல் இருப்பதற்காக ஆன்-போர்டு சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. வேகமாக நகர்ந்து செல்வதற்காக 4 சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த ரோபோ ஆஸ்திரேலியாவில் உருவாக்கப்பட்டதாகும். இந்த ரோபோவுக்குள் இருக்கும் சூடான கம்பார்ட்மெண்ட்டில் அதிகபட்சமாக 10 பீட்சாக்கள் வரை எடுத்துச் செல்ல முடியும்.
பீட்சா ஸ்டோரில் இருந்து 20 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கும் வீடுகளுக்கு இந்த ரோபோவால் பீட்சா டெலிவரி செய்ய முடியும். ஆனால், அதற்கு பிறகு சார்ஜ் செய்தால் மட்டுமே மீண்டும் டெலிவரி செய்ய இயலும். வீடுகளுக்கு துல்லியமாக பீட்சாக்களை சென்று சேர்க்கும் இந்த ரோபோக்களின் தலை உச்சியில் கீபேடு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில் நாம் ஆர்டர் செய்த பீட்சாவின் குறியீடை டைப் செய்தால் ரோபோ தனது ஹீட்டர் கம்பார்ட்மெண்டடை திறந்து பீட்சாக்களை வெளியே நீட்டும். இந்த ரோபோ நியூஸிலாந்தின் சாலை மற்றும் போக்குவரத்து முறைகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளதால் அங்கு மட்டுமே தற்போது சோதனை முறையில் பரிசோதித்து பார்க்கப்பட உள்ளது.