தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புகழ்பெற்ற சர்வதேச மேன் புக்கர் விருதை வென்ற ஓமன் பெண் எழுத்தாளர் …

சர்வதேச புக்கர் விருதை வென்று, அந்த விருதினை பெற்ற முதல் அரபிக் மொழி எழுத்தாளர் என்ற பெருமையை ஓமன் பெண் எழுத்தாளர் பெற்றுள்ளார்.

ஓமன் நாட்டை சேர்ந்த ஜோகா அல்-ஹரத்தி (Jokha Alharthi) என்ற பெண் எழுத்தாளருக்கு அவரது செலஸ்டியல் பாடீஸ் (Celestial Bodies) என்ற புத்தகத்திற்காக புகழ்பெற்ற சர்வதேச மேன் புக்கர் (Man Booker) விருது வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்த விருதைப்பெற்ற முதல் அரபிக் எழுத்தாளர் என்ற பெருமையை ஜோகா அல்-ஹத்தி பெற்றுள்ளார்.

லண்டனில் நடந்த இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஜோகாவுக்கு 50 ஆயிரம் பவுண்ட் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பரிசு தொகையில் பாதியை அந்த புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவருக்கு வழங்க உள்ளதாக ஜோகா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...