Designed by Iniyas LTD
புதிதாக பிறந்த 12 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு…
ஆப்கானிஸ்தானில் வடக்கே உள்ள பன்ஷீர் பகுதியில் மருத்துவமனையில் புதிதாக பிறந்த 12 குழந்தைகளுக்கு திடீரென பாதிப்பு ஏற்பட்டு இறந்துள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது..
குழந்தைகள் பிறந்தவுடன் பாதிப்பு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
எனினும் அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தும் குழந்தைகள் அனைத்தும் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகின்றது.
தொடர்புடைய பதிவு
இதனை அடுத்து உடனடியாக மருத்துவமனை நிர்வாகம், சுகாதார அதிகாரிகளை தொடர்பு கொண்டு, தனியார் ஆய்வக உதவியுடன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் முடிவுகள் தெரிந்தபின்னர் அதுபற்றி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேவேளை புதிதாக பிறந்த குழந்தைகளின் மர்ம மரணத்திற்கான காரணங்கள் பற்றி விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
