தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புதுக்குடியிருப்பில் கிராமங்கள் தோறும் கசிப்பு விற்பனை – பொலிசார் தெரிவிப்பு..

புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் கசிப்பு வியாபாரம், கிராமங்கள் தோறும் அதிகரித்துக் காணப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸாரிர்  தெரிவித்துள்ளனர்.

கடந்த செப்டெம்பர் மாதம், புதுக்குடியிருப்பில்  கசிப்பு வியாபாரம் மற்றும் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட வழக்குகள் 25 பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரம், மூங்கிலாறு, தேவிபுரம், விசுவமடு, மாணிக்கபுரம், இருட்டுமடு, வெள்ளப்பள்ளம், ஆனந்தபுரம் ஆகிய கிராமங்களில் ,

கசிப்பு உற்பத்திகளும் வியாபார நடவடிக்கைகளும் அதிகரித்துக் காணப்படுவதாக புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்துள்ளமை குரிப்பிடத்தக்கது.

Comments
Loading...