தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புயல் எச்சரிக்கை : தமிழக துறைமுகங்களில் 2-ம் நாளாக 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

storm-warning-cageவங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழக துறைமுகங்களில் இரண்டாம் நாளாக ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மேலும்  ஒடிசாவின் பூரி கடற்கரைக்கு தெற்கே மத்திய வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழக துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற உத்தரவிட்டது.

 இதன் படி நேற்றிரவு கடலூர், நாகை, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இரண்டாம் நாளாக இன்று ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கையால் மீனவர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments
Loading...