தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பெல்ஜியம் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு! 26 பேர் பலி

article_1458636041-44பெல்ஜியம் தலைநகர் புருசெல்சில் உள்ள ஸவன்டெம் விமான நிலையத்தில் இன்று அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தன. அருகில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்திலும் குண்டு வெடித்தது. இந்த தாக்குதல்களில் 26 பேர் உயிரிழந்ததாகவும் . பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்கை நியூஸ் தெரிவித்துள்ளது.

குண்டு வெடித்ததில் விமான நிலைய கூரை இடிந்து விழுந்ததால் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளனர்.

வெடிப்பு சம்பவமொன்றையடுத்து விமானநிலையத்தின் நுழை வாயிலிலிருந்து கரும்புகை மேலெழும்பியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, விமான நிலையத்தின் அனைத்து சேவைகளும் மறு அறிவித்தல் வரும்வரையிலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. 

bomp_blast (1)

bomp_blast (3)

bomp_forien (3)

Comments
Loading...