Designed by Iniyas LTD
பொடுகை போக்கும் வேப்பம்பூ…
அனேகம் பேரிற்கு உள்ள பிரச்சனைதான் இந்த பொடுகு. இதனால் பலரிற்கு தலை முடிகூட உதிரும்.
இந்த பொடுகை போக்குவதற்கு நிறைய க்ஷாம்பூக்கள் மருந்துக்கள் இருந்தாலும் இயற்கையாக நமக்கு கிடைகின்ற வேப்பம்பூவை பயன் படுத்தி பொடுகை விரட்டலாம்.
செய்முறை
அதற்கு காய்ந்த வேப்பம்பூவில் [உப்பு கலக்காத வேப்பம்பூ] 50 கிராம் – அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும்.
எண்ணெய் இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறவைத்து குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.
அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.
