தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியினால் தாக்குதலுக்கு உள்ளாகிய முன்னாள் போராளியை விடுவிக்க பின்னடிப்பு..

வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியினால் தாக்குதலுக்கு உள்ளாகிய முன்னாள் போராளியை விடுவிக்க பின்னடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா வைத்தியசாலையில் கைக்கும், காலுக்கும் விலங்கிடப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கெ.வசந்தகுமார் நேற்றுமுன்தினம் (14) நீதிமன்றத்தினால் மூன்று பேரின் சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
என்னும் அவரை  சிறைச்சாலை அதிகாரிகள் தனது கணவரை விடுதலை செய்யவில்லை என குறித்த நபரின் மனைவி கூறியுள்ளார்.
 நீதிமன்றத்தின் உத்தரவானது நேரடியாக பொலிசாருக்கு வழங்கப்படவில்லை என்றும் அதன்காரணமாகவே  தனது கணவரை  விடுதலை செய்ய முடியாது என பொலிஸார்  தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக  நாளையதினமே  தனது கணவரை விடுதலை செய்ய முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளதாக வசந்தகுமாரின் மனைவி   தெரிவித்துள்ளார்.
இதேவேளை முன்னாள் போராளியின் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற வவுனியா ‘தாவுத்’ உணவக உரிமையாளருக்கு ஆதரவாக  கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செயற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் குறித்த அதிகாரி வசந்தகுமாரின் குடும்பத்தினர் மீது கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டதாகவும்  பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...