தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

போக்குவரத்து நெருக்கடிகளை சந்திக்கும் மாற்றுதிரனாளிகள்!

Untitledகிளிநொச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் போக்குவரத்துச் செய்வதில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். கடந்த காலப் போர் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலே 3000க்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.

இவர்கள் குடும்பங்களைத் தலைமை தாங்குபவர்களாகவும் காணப்படுகின்றனர். இந்நிலையில் நாள்தோறும் மாவட்டச் செயலகம், பிரதேச செயலகங்கள், மருத்துவமனை உட்பட பல திணைக்களங்கள் என்பவற்றிற்கு தமது தேவைகளுக்காக செல்ல வேண்டியவர்களாக உள்ளனர்.

பேரூந்துகளில் பயணிக்கும் மாற்றுத்திறனாளிகள் பேரூந்து நிலையங்களிலிருந்து குறித்த திணைக்களங்களுக்கு நீண்டதூரம் நடந்து செல்ல வேண்டிய நெருக்கடி நிலைமை காணப்படுகின்றது.

உதாரணமாக பூநகரி வாடியடிச் சந்தியில் பேரூந்துகளிலிருந்து இறங்கும் மாற்றுத்திறனாளிகள் யாழ்ப்பாணப் பக்கமாக இரண்டு கிலோமீற்றர் தூரத்திலுள்ள பூநகரி பிரதேச செயலகத்திற்கு நடந்து சென்றே தமது தேவைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.

இதேபோன்று அக்கராயன், முழங்காவில் மருத்துவமனைகளுக்கு நாள்தோறும் மாற்றுத்திறனாளிகள் ஒரு கிலோமீற்றர் தூரம் வரை நடந்து சென்றே தமது தேவைகளை பெற்றுக்கொள்ளக் கூடிய அவலம் காணப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்திலே மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்கின்ற நெருக்கடிகள் தொடர்பாக கடந்த காலங்களில் மாவட்டச் செயலகம், பிரதேச செயலகங்களில் நடைபெற்ற கூட்டங்களில் ஆராயப்பட்ட போதிலும் போக்குவரத்துகளில் நெருக்கடி நிலைமையினையே மாற்றுத்திறனாளிகள் தொடர்ச்சியாக எதிர்கொண்டு வருகின்றனர்.

Comments
Loading...