Designed by Iniyas LTD
போட்டியை சமாளிக்க டிரம்ப் அதிரடி பிரசாரம்
போட்டியை சமாளிக்க டிரம்ப் அதிரடி பிரசாரம் மேற்கொண்டுள்ளார். ஹிலாரி கிளிண்டன் போதை மருந்து சோதனைக்கு தயாரா? என கேள்வி விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடுகிற டொனால்டு டிரம்ப் (வயது 70), சர்ச்சைகளில் சிக்கி தவித்து வருகிறார். அந்த வகையில், அவர் கடந்த 2005–ம் ஆண்டு பெண்களைப் பற்றி மிக மோசமாக கருத்து தெரிவித்திருக்கிறார். அப்போது அவர் தான், பெண்களிடம் மோசமாக நடந்து கொண்டது பற்றி குறிப்பிட்டதுடன், பிரபலமாக இருக்கிறபோது ஒருவர் எதையும் செய்யலாம் என கூறி உள்ளார்.
இது தொடர்பாக வீடியோ வெளியானது அவருக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. அவர் மன்னிப்பு கேட்டபோதும், அவரது சொந்தக் கட்சியிலேயே அவருக்கு எதிராக புயல் வீசுகிறது. இந்த நிலையில் அவர்மீது இப்போது அடுக்கடுக்காக பெண்கள் செக்ஸ் புகார்களை கூறி வருகிறார். இது தொடர்பாக குற்றம் சாட்டிய பெண்கள், அதிகாரிகளிடம் புகார் அளிக்காவிட்டாலும், தங்களுக்கு நேர்ந்தது குறித்து நண்பர்கள், உடன்வேலை பார்த்த சகாக்கள், குடும்பத்தினரிடம் பகிர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். டிரம்ப் மீதான அடுக்கடுக்கான செக்ஸ் புகார்கள், அமெரிக்க தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
மேலும் பெண்கள் குறித்து கூறிய கருத்துக்களால் அவரது செல்வாக்கு சரிந்து வருகிறது. அவரது கட்சியினரிடமும், பெண்கள் மத்தியிலும் டிரம்புக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு ஆதரவு குறைந்துள்ளது. அதை சரிக்கட்ட டிரம்ப் அதிரடி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ஹிலாரி கிளிண்டன்-டிரம்ப் இடையேயான நேரடி விவாதம் 2 தடவை நடந்துள்ளது. இரண்டிலும் ஹிலாரி சாமர்த்தியமாக வாதிட்டு மக்களின் மனதை கவர்ந்தார். அதன் மூலம் மக்கள் செல்வாக்கில் டிரம்பை விட 8 புள்ளிகள் முன்னிலை வகிக்கிறார்.
தற்போது ‘செக்ஸ்’ புகார்களில் சிக்கி டிரம்ப் செல்வாக்கு மேலும் சரிந்து வருகிறது. இதற்கிடையே இறுதிக்கட்ட விவாதம் விரைவில் நடைபெற உள்ளது. அதில் ஹிலாரியை வெற்றி பெற டிரம்ப் திட்டமிட்டுள்ளார். அதன் எதிரொலியாக அடுத்த விவாதத்துக்கு முன்னதாக போதை மருந்து சோதனைக்கு நான் தயார். ஹிலாரி கிளிண்டன் தயாரா? என கேள்வி விடுத்துள்ளார். இதுகுறித்து நியூஹாம்ப்ஷியரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது குறிப்பிட்ட அவர் இறுதிகட்ட விவாதத்துக்கு ஆதரவாளர்கள் புடை சூழ வருவார். திரும்பி செல்லும் போது காருக்கு அவர் மட்டும் தனியே செல்வார் என்றார்.