தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்! நியூசிலாந்து – வெஸ்ட்இண்டீஸ் இன்று மோதல்

8 அணிகள் இடையேயான மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் 16-வது ‘லீக்‘ ஆட்டம் இன்று நடக்கிறது. இதில் நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. நியூசிலாந்து அணி ஒரு ஆட்டத்தில் வென்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு இல்லை. ஒரு ஆட்டத்தில் தோற்றது. அந்த அணி 3 புள்ளியுடன் உள்ளது.

வெஸ்ட்இண்டீஸ் தான் மோதிய 3 ஆட்டத்திலும் தோற்றது. நியூசிலாந்து 2-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. வெஸ்ட்இண்டீஸ் முதல் புள்ளிக்காக காத்திருக்கிறது. ‘லீக்‘ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் தான் மோதிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றன. இரு அணிகளும் 8 புள்ளியுடன் உள்ளது. இங்கிலாந்து 6 புள்ளியிலும், தென்ஆப்பிரிக்கா 1 புள்ளியிலும் உள்ளன.

Comments
Loading...