Designed by Iniyas LTD
மக்களின் பாதுகாப்பிற்காக முஸ்லிம் தலைவர்கள் கட்சி பேதம் பார்க்கவில்லை – வியாழேந்திரன்
முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் முஸ்லிம் தலைவர்கள் கட்சி பேதம் பார்க்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “கடந்த காலங்களில் முஸ்லிம் மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டபோது, முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லையென தெரிவித்து தமது பதவிகளை முஸ்லிம் தலைமைகள் இராஜினாமா செய்தனர். அதன் பின்னர் மீண்டும் பதவிகளை பொறுப்பேற்றபோது, மக்களின் பல பிரச்சினைகளை தீர்த்து வைக்குமாறு நிபந்தனைகளை முன்வைத்தே அவர்கள் தமது பதவிகளை பொறுப்பேற்றனர்.
ஆனால் கடந்த காலங்களில் பல கோரிக்கைகள் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டபோதும், அவற்றில் எதனையுமே பெற்றுக்கொள்ள முடியாதுள்ளமை வேதனையான விடயமாகும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.