தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மக்கள் பாவனைக்காக உள்ள நீரை இராணுவத்தினர் எடுத்து செல்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

 

யாழ்  மாநகர சபை எல்லைப் பகுதியில் உள்ள திருநெல்வேலி சிவன் ஆலயத்தின் பாவனைக் கிணறானது ஆலயப் பாவனைக்கு மட்டுமன்றி அயல் கிராமத்தவர்களின் குடிநீராகவும் விளங்குகின்றது.

இந்நிலையில் குறித்த  கிணற்றில் இருந்து நாவாந்துறையில் உள்ள இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர்  பாவனைக்காகவும்  தினமும் அக்கிணற்றில் இருந்து  நீர் எடுத்துசெல்லப்படுகின்றதாக  தமிழரசுக்கட்சி சார்பு யாழ்.மாநகரசபை உறுப்பினர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதோடு  மக்களின் பாவனைக்கான நீர்த் தட்டுப்பாடு ஏற்படும் என்றும்,   இராணுவத்தினர் தமக்கான குடிநீரை பிற பகுதியில் இருந்து பெறுவதற்கு முன் வர வேண்டுமெனவும்  அவர் கோரிக்கை முன்வைத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Comments
Loading...