தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மட்டக்களப்பில் மிதி வெடிகள் அகற்றும் பணி தீவிரம்

கடந்த யுத்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் புதைக்கப்பட்ட மிதி வெடிகளை அகற்றும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  BT-VC

இதற்கமைவாக வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புறுமூலை – பாசிக்குடா வீதிக்கு அருகாமையிலுள்ள காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்ட மிதி வெடிகளை அகற்றும் பணிகள் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.    குறித்த மிதி வெடிகள் அகற்றும் பகுதிகளில் சிவப்பு மற்றும் மஞ்சல் மிதி வெடி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...