Designed by Iniyas LTD
மன்னார்-அடம்பன் பொலிஸ் பிரிவில் சுமார் 820 கிலோ பீடி சுற்றும் இலைகள் மீட்பு..
மன்னார்-அடம்பன் பொலிஸ் பிரிவில் சுமார் 820 கிலோ பீடி சுற்றும் இலைகள் அடங்கிய பொதிகளை இன்று காலை அடம்பன் பொலிஸார் மீட்டுள்ளனர்.
அடம்பன் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலையடுத்து அடம்பன் கீலிக்கரையான் கடற்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 13 பொதிகளை பொலிஸார் கைபற்ரியுள்ளனர்.
எனினும் இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


