தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மறைக்கப்பட்ட தமிழரின் வரலாறு…

இலங்கையில தமிழ் மன்னர்களின் வரலாற்றை  காணவில்லை என்று பின் நோக்கி  தேடினால் திட்டமிட்டு தமிழ் மன்னர்களை எல்லாம் பௌத்த மன்னன் ஆக்கிய ஆயோக்கிதனம் புரிகிறது. கி.மு வால்மீகினால் எழுதப்பட்ட  இராமாயணத்தில் தமிழர்களை அரக்கர்கள் என்று வர்ணிக்கும் அளவுக்கு இந்த ஆரியர்களுக்கு தமிழர் மீது எவ்வளவு காழ்ப்புணர்ச்சி. ஆரிய மொழியான பாளியில் எழுதப்பட்ட மகாவம்சத்தில் தமிழர்களின் வரலாற்றை திருடி பௌத்த  வரலாறாக மாற்றிய சூழ்ச்சிக்கார மகாநாம தேரின்  கேவலமான சிந்தனை தான் ஈழத் தமிழர்களை இந் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. மகாவம்சத்தின் பொய்களை  அனைத்து தமிழ் மக்களும் அறிந்து இருக்க கட்டாயம்.

பொய் 1

விஜயனின் ஆட்சியின் பின்னர் அவனுக்கு வாரிசு இல்லாமையினால், லாலா நாட்டிற்கு தூதனுப்பி, அங்கிருந்து விஜயனின் சகோதரன் ஒருவனின் மகனான பண்டுவாசுதேவன் என்பவன் இலங்கைக்கு வந்து அரசுரிமையை பொறுப்பேற்கின்றான் என்கிறது மகாவம்சம்,ஆனால் பாண்டுவாசுதேவன் பாண்டியன் குலத்தை சேர்ந்தவன் என்கிறது மகாவம்சத்திற்கு முதல் உருவான தீபவமசம்.

பொய்  2

பண்டுவாசுதேவனின் மகள் வழிப் பேரன் பண்டுகாபயன் (கி.மு. 437-367) இலங்கையின் முதலாவதாகக் கருதப்படும் அரச மரபின் நான்காவது அரசனாவான். பண்டு காபய” என்று மகாவம்சத்தில் குறிப்பிடப்படும் இம்மன்னன் சிங்கள மன்னனாக மகாவம்சத்தில்சொல்லப்படுகிறது, இவனது பெயர் “பண்டு கபாயன்” (பண்டு என்றால் “பழைய” ,கபாயன் என்றால் “சிவன்”)   சிவனை கடவுளாக வழிபடும்  ஒரு த‌மிழ் ம‌ன்னன் ஆவான்

இலங்கையில் சிவனை முழு முதற் கடவுளாக கொண்ட கோயிலான திருக்கோணேசரம், திருக்கேதீதரம் மற்றும் நகுலேசர கோயில்கள் விஜயன் இலங்கைக்கு வந்த காலமாக குறிப்பிடபடும் கி.மு   5 ஆம் நூற்றாண்டு முன் கட்டப்பட்டது. இந்த கோயில்கள் யாவும் கி.மு 6ஆம் நூற்றாண்டு முன் கட்டப்பட்டது

அக் கால அரசர்கள் சிவ பக்தர்களாகவும்  பல அரசர்களின் பெயர்கள்  சிவனை குறிக்கும் பெயர்களாகவே இருந்தன.

பண்டுகாபயனின் மகன் மூத்தசிவன்.  இலங்கையின் முற்கால இராசதானியாகிய அனுராதபுர இராசதானியை கி.மு 367 தொடக்கம் கி.மு 307 வரை ஆண்ட தமிழ்  அரசனாவான்.  இவனுக்கு அபயன், தேவநம்பிய தீசன், மகாநாகன், உத்திய, மகாசிவன், சூரதிச்சன், அசேலன், ஆகிய மகன்கள்  மூத்தசிவனுக்கு பின் இலங்கை ஆண்ட மன்னர்கள்.

இந்த தமிழ் மன்னர்களை எல்லாம் சிங்கள மன்னனாக திரிபுபடுத்தி இலங்கையில் தமிழ் மன்னர்கள் வரலாற்றை அப்பட்டமாக மாற்றி அமைத்தது இந்த மகாவம்சம்.

தொடரும் மகாவம்சம் பொய்கள்……

Comments
Loading...