Designed by Iniyas LTD
மழைவிட்டாலும் தூறள் விடாத நிலை.

கிளிநொச்சியில் அண்மையில் இரவுப்பொழுதில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர் ருக்கி பெனான்டோவின் பெற்றோர்களையும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் புலனாய்வாளர்கள் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு அனுசரணையாக செயற்பட்டு, விபூசிகா மற்றும் அவரது தாயாரின் கைதுகள் தொடர்பில் மக்களிடம் உண்மை நிலையை அறிவதற்காக கிளிநொச்சி சென்ற போது பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட ருக்கி மற்றும் அருட் தந்தை பிரவீன் ஆகியோர் நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று முன்னாள் இரவு விடுவிக்கப்பட்டனர்.
ஆனால் சிங்களப்படைபுலனாய்வாளர்கள் ருக்கி பெர்னாண்டோவின் பெற்றோரிடமும் விசாரணை நடத்தவேண்டும் என அச்சுறுத்தியுள்ளனர்.
இதே வேளை இன்று அவர்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைக்காக அழைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.