Designed by Iniyas LTD
மாடியில் இருந்து விழுந்து ஸ்ரீ போலீஸ் மா அதிபர் பலி!
ஸ்ரீலங்காவின்முன்னாள் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் போதி லியனகே திடீர் விபத்து காரணமாக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
மாடிப்படியில் இருந்து வீழ்ந்த அவர், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 5 மணியளவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த இரண்டு நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்துள்ளார்.
அவரின் இறுதி கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொலிஸ் சிறப்பு படையணியின் முதலாவது கட்டளைத் தளபதியாக போதி லியனகே செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.