Designed by Iniyas LTD
மாணிக்கபுரம் கார்த்திகன் முன்பள்ளிக்கு இடையூறு விளைவிற்கும் தனி நபர்கள் – பொலிசில் முறைப்பாடு…
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மாணிக்கபுரம் பகுதியில் அமைந்துள்ள கார்த்திகன் முன்பள்ளி காணியினை தமது என கோரி,
கற்றல் செயற்பாட்டிற்கு இடையூறு விளைவிப்பதாக தெரிவித்து முன்பள்ளி ஆசிரியர் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கத்தினரால் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் நேற்றைய தினம் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் மாணிக்கபுரம் பகுதியில் காணப்பட்ட மூன்று ஏக்கர் அரச பொதுக்கணியினை போரின் பின்னர்2016 ஆம் ஆண்டு தெற்கில் இருந்து வந்த குடும்பம் ஒன்று தங்களின் காணி என்று உரிமைகோரிவந்துள்ளது.
இந்நிலையில் அவர்களின் குடியேற்றத்திற்காக பிரதேச செயலகத்தினால் ஒரு தொகுதி காணி வழங்கப்பட்டுள்ளது.
ஏனைய அரச காணிகளை பொது தேவைக்காக பிரதேச செயலாளர் பகிர்ந்தளித்துள்ளார் அவற்றுள் கார்திகன் முன்பள்ளிக்கு என 24 பேர்ச் விஸ்தீரனம் கொண்ட காணி எழுதிக்கொடுக்கப்பட்டுள்ளது
இவ்வாறான நிலையில் காத்திகன் முன்பள்ளியில் மூன்று ஆசிரியர்களும் ஜம்பது வரையான முன்பள்ளி மாணவர்களும் கல்விகற்று வருகின்றார்கள்.
முன்பள்ளியின் வளர்ச்சி கருதி மலசலகூடம்,கிணறு கட்டிடங்கள் கட்டப்பட்டு வரும் நிலையில் அருகில் உள்ள தனிநபர்கள் தங்கள் காணிஎன்று கூறி,
அங்கு கட்டுமான பணிகளில் ஈடுபட்டவர்களை விரட்டியதுடன் முன்பள்ளி ஆசிரியர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்கள்
சம்பவம் தொடர்பில் பிரதேச செயலாளருக்கு தெரியப்படுத்தியும் குறித்த தனிநபர்களின் செயற்பாடு தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலாளர் பொலீசாருக்கு கடிதம் அனுப்பிவைத்தும் ,
அவர்களின் செயற்பாட்டினால் முன்பள்ளியின் கற்றல்செயற்பாடு மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கமுடியாத நிலை காணப்படுவதாக முன்பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

