தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மாநிலங்களவை ஒரே நாளில் 4 முறை ஒத்திவைப்பு

parliament1உத்தரப் பிரதேச மாநிலத்தை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாகக் கூறி அம்மாநில எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை அடுத்தடுத்து 4 முறை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவை இன்று கூடியவுடன் உத்தரப் பிரதேச மாநில சமாஜ்வாதி எம்.பி. ராம் கோபால் யாதவ், தனது மாநிலத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு தொடர்ந்து பாரபட்சம் காட்டி வருவதாக குற்றம்சாட்டினார். மேலும் இதே நிலைப்பாட்டை மத்திய அரசு தொடர்ந்து கடைபிடித்து வந்தால் மாநிலங்களவை செயல்பாட்டை முடக்குவோம் என்று தெரிவித்தார். ராம் கோபால் யாதவின் குற்றச்சாட்டை ஆதரித்து சமாஜ்வாதி கட்சியினர் அவையின் மையப் பகுதிக்குச் சென்று குரல் எழுப்பினர். மேலும் இதே நிலைமை தங்கள் மாநிலத்திற்கும் நிலவுவதாக கூறி பிகார் மாநில எம்.பி.க்களும் அமளியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மாநிலங்களவை துணைத் தலைவர் குரியன் அவையை ஒத்திவைத்தார். பிறகு அவை மீண்டும் கூடியதும் அமளி நீடித்ததால் அடுத்தடுத்து மூன்று முறை ஒத்திவைப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Comments
Loading...