Designed by Iniyas LTD
மாவீரர் நாளுக்கு பின்னர் யாழில் விசேட அதிரடிப்படையின் ரோந்து நடவடிக்கை?
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் இரவு நேரங்களில் விசேட அதிரடிப் படையினரின் ரோந்து நடவடிக்கைகள் கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சுமார் 10 எண்ணிக்கையைக் கொண்ட இந்த விசேட அதிரடிப் படையினர், நகரப் பகுதிகளின் வீதிகளில் ரோந்து செய்து வருகின்றனர்.
கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி, யாழ்ப்பாணத்தில் மாவீரர்தினம் அனுஸ்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வீதி ரோந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாலை 5 மணியளவில் மேற்கொள்ளப்படும் இந்த ரோந்து, இரவு 9 மணியையும் தாண்டி செய்யப்பட்டு வருகின்றது.