Designed by Iniyas LTD
மின்சாரம் இல்லாது அவதிப்படும் பூநகரி மாணவர்கள்!
எமது தலைக்கு மேலால் செல்லும் மின்சாரத்தினை எமது இல்லங்களிற்கும் வழங்கி ஒளியூட்டி மாணவர்களின் கல்விக்கு வழி காட்டுங்கள் என விநாசியோடை , கெளதாரி முனை மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர.
கிளிநொச்சி மாவட்டம் பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எமது கிராமத்தில் மொத்தம் 119 குடும்பங்கள் வாழ்கின்றனர். இவர்களில் 70 குடும்பங்களிற்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்ட திட்டங்களின் ஊடாக வீட்டு வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
இவற்றினில் 15ற்கும் மேற்பட்ட வீடுகள் மின்வேலையினையும் மேற்கொண்டுள்ளனர்.
இருப்பினும் இன்று வரை மின்சாரம் வழங்கப்படவேயில்லை. இருப்பினும் கடந்த 3 ம் மாதம் இரு வீட்டிற்கும் பாடசாலைக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டது . அது கூட ஓர் பனை முறிந்து வீழ்ந்தமையினால் 5ம் மாதம் முதல் தடைப்பட்டு விட்டது.
இவ்வாறு மின்வயர்கள் எமது தலைக்கு மேலாகச் சென்றும் மின்சாரம் வழங்கப்படாத போதிலும் அயல் கிராமத்திற்கு சீரான மின் விநியோகம் உண்டு வெட்டுக்காடு என்னும் கிராமத்திற்கும் இவ்வாறு மின் விநியோகம் இடம் பெறுகின்றது எனில் அது அங்குள்ள மக்களின் நலனை முன்னிட்டு அல்ல அங்குள்ள பாரிய இராணுவ முகாம்கள் இரண்டிற்கும் இந்த மின் இணைப்பே செல்கின்றது.
இவ்வாறு மக்களை புறக்கனித்து இராணுவத்தினருக்கு மட்டும் சேவை செய்யும் அதிகாரிகள் எமது கிராமங்களிலும் இராணுவ முகாம் இருந்தால்தான் மின்சாரம் வழங்குவார்களா எனக் கேள்வி எழுப்பியதோடு இ.மி.சபை அதிகாரிகள் வந்து ஒரு கிழமை எமது கிராமங்களில் வாழ்ந்து பார்க்கட்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இவ்வாறு இப் பிரதேச மக்களின் குற்றச்சாட்டுத் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட மின் அத்தியட்சகருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது ,
அங்கு இராணுவத்தினருக்காக நாம் மின் வழங்கவில்லை குறித்த பகுதியில் உள்ள இராணுவ முகாமிற்கும் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பனை மரம் அண்மையில்தான் முறிந் தது அது சீர் செய்யப்படுகின்றது.
இருப்பினும்அந்த தடை ஏற்பட்ட பிரதேசத்திற்கு அப்பால் யாருக்கும் இதுவரை மின்சாரம் கிடையாது எனத் தெரிவித்தார்.
இவ்வாறு தடை ஏற்பட்ட பகுதிக்கு அப்பால் உள்ள பாடசாலைக்கு மின் இணைப்பு இருந்து தடை ஏற்பட்டமை தொடர்பில் கேட்டபோது அது தவறான செய்தி குறித்த பாடசாலைக்கு இன்னும் இணைப்பு வழங்கவில்லை என மறுத்து விட்டார்.
மின்சார சபையின் மாவட்ட மின் அத்தியட்சகரின் கூற்றுத் தொடர்பில்
பாடசாலைக்கு கடந்த மார்ச இறுதியில் மின் இணைப்பு வழங்கப்பட்டு 70 யுனிற் மின்சாரமும் பாடசாலையால் உபயோகிக்கப்பட்ட சமயமே பனை முறிந்து மின் தடை ஏற்பட்டது.
இவ்வாறு தடை ஏற்பட்டும் இரு மாதம் ஆன நிலையில் என்னால் இ.மி.சபையின் கவனத்திற்கு குறித்த விடயம் பலமுறை தெரியப்படுத்தப்பட்டது. இதுவே உண்மை இதற்கு அப்பால் உரியவர்கள் நேரில் வந்து ஆய்வினை மேற்கொள்ள முடியும்.