Designed by Iniyas LTD
மிருசுவிலில் படைமுகாமை இன்று திறக்கிறார் கோத்தபாயராஜபக்ச
தென்மராட்சியில் நிலைகொண்டுள்ள 52 ஆவது படையணிக்கு மிருசுவிலில் புதிதாக படைமுகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படைமுகாமைப் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச இன்று திறந்து வைக்கிறார். 
இன்று காலை 10.30 மணிக்கு இந்தத் திறப்பு விழா வைபவம் நடைபெறவுள்ளது. யாழ். மாவட்டத்தில் இருந்து மாற்றலாகிச் செல்லும் மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
இதில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் தயா ரட்ணாயக்கா மற்றும் படை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.
52 ஆவது படைமுகாம் இதுவரை காலமும் வரணியில் தனியார் காணிகளில் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.