தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியம் : 15 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு

இலங்கை கடற்படையினர் கச்சத்தீவு-தலைமன்னார் இடையே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 15 பேரை கைது செய்துள்ளனர். 3 படகுகளும் இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Fishermenஇந்நிலையில் சுமார் 700 க்கும் மேற்பட்ட படகுகளில் ராமேஸ்வரம் ‌பகுதி மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றதாக கூறப்படுகிறது. சட்டவிரோத முறையில் மீன் பிடித்ததால் கைது செய்யப்பட்டிருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படையினர் தொடர்ந்து இதுபோன்ற துன்புறுத்தல்களில் ஈடுபடுவதாக தமிழக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழக கச்சத்தீ்வை இலங்கையிடமும் இருந்து மீட்பதே இதற்கு ஒரே தீர்வு என்றும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இலங்கை கடற்படையினர் செய்யும் அட்டூழியங்களால் தங்கள் வாழ்வாதாரம் நாளுக்குநாள் பாதிக்கப்படுவதாகவும், மோசமான நிலைக்கு தள்ளப்படுவதாகவும் தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments
Loading...