Designed by Iniyas LTD
மீண்டும் விடுதலைப்புலிகளின் ஆயுதம் தேடிய அகழ்வு பணி தோல்வியில் முடிவு..
முல்லைத்தீவு கனடியன் வீதி அளம்பில் பகுதியில் நேற்றையதினம் விடுதலைப்புலிகளின் ஆயுதம் தேடிய மற்றுமொரு அகழ்வு பணி தோல்வியில் முடிந்துள்ளது.
விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கிளிநொச்சி பூநகரி உதவி பொலிஸ் அதிகாரி சந்தன கொடிதுவக்கு அவர்களுக்கு சிறைக்காவலில் உள்ள முன்னாள் போராளி ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய அக்கராயன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம் எம் டி எம் சத்துரங்க அவர்களால் முல்லைத்தீவு நீதிமன்றின் அனுமதி பெறப்பட்டு அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன
காலை 9 மணிமுதல் சுமார் 2 மணித்தியாலங்கள் பொலிசார் இராணுவம் ஆகியோரால் நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் தோடுதல் நடைபெற்றபோது எதுவும் கிடைக்கப்பெறாத நிலையில் அகழ்வுப்பணிகள் நிறைவடைந்துள்ளன

