Designed by Iniyas LTD
மதுரையில் பெட்ரோல் குண்டு வீச்சு!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் வெளிமாநிலத்தவர்களின் கார்கள் பழைய சென்டிரல் மார்க்கெட் பகுதியில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. கோவிலின் வெளிப்புற பகுதியான வடக்கு சித்திரை வீதி-கிழக்கு சித்திரை வீதி சந்திப்பில் ஒரு பொது கழிப்பறை உள்ளது.
அந்த கழிப்பறை அருகே நேற்று மாலை 4 மணியளவில் பெட்ரோல் நிரம்பிய பாட்டில் ஒன்று வீசப்பட்டு உடைந்து கிடந்தது. ஆனால் அந்த பாட்டில் வெடிக்கவில்லை. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் பெரிதுபடுத்தவில்லை. பின்னர் இரவு 7.30 மணியளவில் அதே இடத்தில் மீண்டும் ஒரு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அந்த பாட்டிலும் வெடிக்கவில்லை.
சிறிது நேரத்தில் சென்டிரல் மார்க்கெட் சந்து பகுதியில் ஒரு வீட்டின் மீது பெட்ரோல் நிரம்பிய பீர் பாட்டில் வீசப்பட்டது. அந்த பாட்டில் வெடித்து வீட்டின் சுவரில் தீப்பற்றியது.
இதனை பார்த்த அந்த பகுதியினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் தடயவியல் அதிகாரிகள் அங்கு வந்து சோதனை செய்தனர். இந்த நாசவேலையில் ஈடுபட்டவர்கள் யார் என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.