Designed by Iniyas LTD
மீள்குடியமர்வதற்கும் தமது அடிப்படை உரிமையையும் உறுப்படுத்துமாறு கோரி முறைப்பாடு செய்துள்ளனர் இரணை தீவு மக்கள்
தமது சொந்த இடத்தில் மீள்குடியமர்வதற்கும் தமது அடிப்படை உரிமையையும் உறுப்படுத்துமாறு கோரி இரணை தீவு மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்,
குறித்த முறைப்பாடு யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி
இரணை தீவு மக்கள் போர் காலப்பகுதியான 1992ஆம் ஆண்டு கடற்படையினரால் வெளியேற்றப்பட்டு கடந்த 26 ஆண்டுகளாக கிளிநொச்சி இரணை மாதா நகரில் வசித்து வருகின்றனர்.
அதோடு தமது வாழ்வாதாரத் தொழிலான கடற்றொழிலை முழுமையாக முன்னெடுக்க முடியாது அந்த மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இரணை தீவிலுள்ள தமது பூர்வீக காணிகளில் மீள்குடியமர அனுமதிக்குமாறு வலியுறுத்தி அந்த மக்கள் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும் கடந்த ஒரு வாரமாக இரணை தீவில் தங்கியிருந்து தமது அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந் நிலையில் இரணைதீவு மக்கள் ஆணைக்குழுவில் தமது அடிப்படை உரிமை மீறப்படுவதாக முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
