தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி வடக்கில் மூன்று நாட்கள் துக்க தினம்!

unnamed-4முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் வடக்கு மாகாண சபையின் கோடி பறக்க விடப்பட்டது. அத்துடன் அவரது மறைவிற்கு வட மாகாண சபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டதோடு 2 நிமிட  அக வணக்கமும் செலுத்தப்பட்டது.
வட மாகாண சபையின் 67வது அமர்வு இன்றைய தினம் (06.12.2016) பேரவைத்தலைவர் சி.வி.பல.சிவஞானம்  தலைமையில் இடம்பெற்ற நிலையில் இவ்விரு நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் வடக்கு எங்கும் கருப்புக்கொடி பறக்க விடப்பட்டுள்ளதொடு, மூன்று தினங்கள் துக்க தினமாக  அனுஷ்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...