Designed by Iniyas LTD
முல்லை மாவட்ட செயலகத்தில் புதிய உள்ளூர் அதிகார சபைகளை ஸ்தாபித்தல் மற்றும் தற்போது உள்ள உள்ளூர் அதிகார சபைகளை தரமுயர்த்தல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் சற்று முன்னர் ஆரம்பம்…
புதிய உள்ளூர் அதிகார சபைகளை ஸ்தாபித்தல் மற்றும் தற்போது உள்ள உள்ளூர் அதிகார சபைகளை தரமுயர்த்தல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் ஒன்று முல்லைதீவில் ஆரம்பமாகியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் அவர்களது தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது
இந்த கலந்துரையாடலில் கரைதுறைப்பற்று பிரதேச சபையை நகர சபையாக தரமுயர்த்துதல் மற்றும் ,
ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு பிரதேசங்களுக்கு தனித்தனியான பிரதேச சபைகளை நிறுவுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயும் முகமாக இந்த கலந்துரையாடல் இடம்பெறுகிறது
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் அவர்களது தலைமையில்இடம்பெறும் இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர்கள் முல்லைத்தீவு பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர்,
புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைகளின் தவிசாளர்கள், புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைகளின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
கரைதுறைப்பற்று பிரதேச சபையை நகர சபையாக தரமுயர்த்துமாறும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையை ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு பிரதேசங்களுக்கு தனித்தனியான பிரதேச சபைகளாக பிரிக்குமாரும் மக்கள் தொடர்ச்சியாக கோரிவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.






