தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லைத்தீவில் 15682 குடும்பங்கள் வீடற்ற நிலையில்!

download

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்னும் 15682 புதிய வீடுகள் தேவையாக உள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

41367 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரைக்கும் 19565 வீடுகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளதோடு, பகுதியளவில் சேதமுற்ற 3418 வீடுகள் திருத்தப்பட்டுள்ளது. அத்தோடு மேலும் 2657 பகுதியளவில் சேதமற்ற வீடுகளும் திருத்தப்பட வேண்டியுள்ளது எனவும் மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவில் 990 வீடுகளும், துனுக்காய் பிரதேச செயலக பிரிவில் 1175 வீடுகளும்,ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் 2136 வீடுகளும், கரைதுரைப்பற்று பிரதேச செயலக பிரிவில் 5168 வீடுகளும், புதுகுடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் 4616 வீடுகளும், வெலிஓயா பிரதேச செயலக பிரிவில் 1597 வீடுகளும் அமைத்துக்கொடுக்க வேண்டியுள்ளது. என குறித்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவில் 1489 வீடுகளும், துனுக்காய் பிரதேச செயலக பிரிவில் 2025 வீடுகளும்,ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் 3180 வீடுகளும், கரைதுரைப்பற்று பிரதேச செயலக பிரிவில் 4929 வீடுகளும், புதுகுடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் 6870 வீடுகளும், வெலிஓயா பிரதேச செயலக பிரிவில் 1072 வீடுகளும் பல்வேறு திட்டங்களுக்கு ஊடாக அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...