தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லைத்தீவில் 336ஆவது நாட்களாக தொடரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்!

ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத் தருமாறு கூறி தாயகமெங்கும் ஈழத்து உறவுகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு வருடங்களுக்கு மேலாக தொடரும் இந்த போராட்டம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்தாலும் இன்னமும் உறவுகளுக்கு எந்தத் தீர்வும் கிடைக்காது போராட்டம் தொடர்கிறது.

அந்த வகையில் முல்லைத்தீவு உறவுகள் 336 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் அரசியல் வாதிகள் எம் உறவுகளின் போராட்டத்துக்கு ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்காது இருப்பது மிகவும் வேதனையான விடையமாகும்.

 

Comments
Loading...