தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லைத்தீவில் திருகோணமலையை சேர்ந்த 24 பேர் கைது..

முல்லைத்தீவு நாயாற்று புலிபாய்ந்த கல் கடற்பகுதியில் சட்ட விரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 24 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலையைச் சேர்ந்த ஜந்து படகுகளும், அதில் தொழில் செய்த 24 கடற்தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்து நேற்று மாலை அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மீனவர்களின் படகுகளில்சட்டவிரோ தொழில் உபகரணங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...