Designed by Iniyas LTD
முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு…
முல்லைத்தீவு – நாயாறு நீராவியடிப்பிள்ளையார் ஆலய வளாகத்தில், புத்தர்சிலை அமைக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணைகள் நேற்று முன் தினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில், நீதிபதி எஸ்.லெனின்குமார் அவர்களின் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது முல்லைதீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அத்துமீறி புத்தர்சிலை அமைக்கப்பட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதோடு அபிவிருத்திவேலைகளுக்கும் தற்காலிக தடைவிதித்து தொல்பொருள்திணைக்கள பணிப்பாளர் நாயகத்தை மன்றில் ஆஜராகுமாறு பணிப்பும் விடப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த பகுதிக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுவருகிமன்றமை குறிப்பிடத்தக்கது.





