தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் நிகழ்வை நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது

மே 18ஆம் திகதி ஈழதமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத நாள்.

இந்நிலையில் மே 18  முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் நிகழ்வை நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­கள் குறித்து வட மாகாண சபை­யி­னர் நாளை­ம­று­தி­னம்   ஆரா­ய­வுள்­ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முத­ல­மைச்­சரின் அமைச்­சில் முற்­ப­கல் 10 மணிக்கு இது தொடர்­பில் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ளது.

இதற்காக மாகாண சபை­யின் அவைத் தலை­வர், அமைச்­சர்­கள் மற்­றும் உறுப்­பி­னர்­க­ளுக்கு முத­ல­மைச்­சர் அழைப்பு விடுத்­துள்­ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த சில வரு­டங்­க­ளாக வடக்கு மாகாண சபையே முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை ஏற்­பாடு செய்து நடத்­தி­வ­ரு­கி­றது.

வழ­மை­போன்று இந்த முறை­யும் அது தொடர்­பில் ஒழுங்­கு­களை மேற்­கொள்ள இந்­தக் கலந்­து­ரை­யா­டல் ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

யாழ் பல்­க­லைக் கழக மாண­வர் ஒன்­றி­யம்

இதே­வேளை, முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை அனை­வ­ரும் ஒரு­மித்து ஒரே இடத்­தில் நினை­வு­கூர வேண்­டும் என  யாழ் பல்­க­லைக் கழக மாண­வர் ஒன்­றி­யம் மீண்­டும் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

இது தொடர்பில் அவர்கள் ஊடக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில்   நினை­வேந்­தலை ஓரி­டத்­தில் ஒற்­று­மை­யாக நடத்த ஒத்­து­ழைக்­கு­மாறு பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் விடுத்த கோரிக்­கை­யைத் தாம் ஏற்­றுக்­கொள்­வ­தா­க­வும்,

மாண­வர்­க­ளு­டன் இணைந்து நிகழ்வை  நடத்­து­வ­தற்கு தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி மற்­றும் அகில இலங்கை தமிழ் காங்­கி­ரஸ் கட்­சி­கள் தீர்­மா­னித்­துள்­ளதாகவும்   முன்­ன­ணி­யின் செய­லா­ளர் செ.கஜேந்­தி­ரன் விடுத்த செய்­திக் குறிப்­பில் தெரி­விக்­கப்­பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...