தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மேற்கிந்திய தீவுகள் ஆட்டத்தை இடை நிறுத்தி நாடு திருப்பம்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி, இடைநடுவில் நிறுத்திக் கொண்டு நாடு திரும்பியது. மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட சம்பள முரண்பாடு காரணமாக  வீரர்கள் போட்டியிலிருந்து விலகி இருந்தனர்.we

இதனால் இந்தியா கிரிக்கெட் அணியுடனான நான்காவது ஒருநாள் போட்டியோடு அந்த அணி வீரர்கள் தங்களது பயணத்தை முடித்துக் கொண்டனர். அந்த அணி 5 ஒருநாள் போட்டி, ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டம் மற்றும் 3 டெஸ்டில் இந்தியாவுடன் விளையாட திட்டமிட்டு இருந்தது.

எனினும் தர்மசாலாவில் நடந்த நான்காவது ஒருநாள் போட்டியோடு அந்த அணி வீரர்கள் நாடு திரும்பினர். போட்டியை பாதியில் ரத்து செய்ததற்காக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் மன்னிப்பு கேட்டு இருந்தது. மேற்கிந்திய தீவு வீரர்களின் இந்த செயலால் இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் அதிருப்தி அடைந்து உள்ளது.

இந்த சுற்றுப்போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டதால் தங்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல் தெரிவித்து இருந்தார்.

400 கோடி ரூபா வரை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்திடம் நஷ்டஈடு கேட்கும் என்று தெரிகிறது. எதிர்வரும் 21ம் திகதி ஐதராபாத்தில் நடைபெறும் கிரிக்கெட் வாரிய அவசர செயற்குழுவில் இதுபற்றி முடிவு செய்யப்படும்.

அத்துடன் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான நேரடி போட்டித் தொடரை 5 ஆண்டு நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் வாரியத்தின் உறுப்பினர்கள் விரும்புகிறார்கள். இதுபற்றியும் அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

Comments
Loading...