Designed by Iniyas LTD
யாழில் இருவரை வழிமறித்து கடித்து காயப்படுத்திய வினோத கும்பல்!
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை வழி மறித்த நால்வர் அவர்களை மோசமாகத் தாக்கியதுடன் கடித்தும் காயம் விளைவித்தனர். தாக்குதலில் ஒருவருக்குப் பல் உடைந்தது.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் சரசாலை கனகன்புளியடிச் சந்தியில் இடம்பெற்றது.
வேலைக்குச் சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் மட்டுவிலில் உள்ள வீட்டுக்கு வரும் வழியில் கனகன்புளியடிப் பேருந்துத் தரிப்பிடத்தில் நின்ற நால்வர் வழி மறித்து காரணமின்றித் தாக்கிக் கடித்துவிட்டுத் தப்பியோடினர் எனத் தெரிவிக்கப்பட்டது.
தாக்குதல் மற்றும் கடிக் காயங்களுக்கு இலக்கான மட்டுவில் மத்தியைச் சேர்ந்த இருவரும் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .