தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழில் குண்டுவெடிப்பு! ஒருவர் படுகாயம்

721c6d58-85f7-474f-a25d-3373e23d7fe3_S_secvpfயாழ்ப்பாணம், அரியாலை வசந்தபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (13) மாலை, நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குருநகர், ஐந்து மாடிக் குடியிருப்பைச் சேர்ந்த நோபிள் றொபின்சன் (வயது 37) என்பவரே படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த நபர், யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் தனது காணியை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, மண்வெட்டி கொத்துப்பட்டதில் புதையுண்டிருந்த வெடிபொருள் வெடித்துள்ளது. புதைக்கப்பட்டிருந்த மிதிவெடியே வெடித்திருக்கலாம் எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

Comments
Loading...