தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழில் தீக்குளித்த பெண் உயிரிழப்பு!

minore-girl-fire-herselfதனக்கு தானே மண்­ணெண்ணெய் ஊற்றி தீ மூட்­டிய இளம் பெண், ஒரு வார காலத்தின் பின்னர் சிகிச்சை பலன­ளிக்­காத நிலையில் நேற்­று­ முன்­தினம் செவ்­வாய்க்­கிழமை அதி­காலை மர­ண­ம­டைந்­துள்ளார்.

யாழ்ப்­பாணம், ஈச்­ச­மோட்டை வீதி­யைச்­சேர்ந்த மருதை மேனகா (வயது 30) என்­ப­வரே மரணம் அடைந்­த­வ­ராவார்.

கடந்த 17ஆம் திகதி வீட்­டி­லுள்ள உற­வி­ன­ரி­டையே ஏற்­பட்ட முரண்­பாட்­டை­ய­டுத்து விரக்­தி­யுள்ள குறித்த பெண் தனக்கு தானே தீ மூட்­டி­யுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­படு­கின்­றது. இத­னை­ய­டுத்து உற­வி­னர்­களால் குறித்த பெண் யாழ். போதனா வைத்­தி­ய­சாலையில் சிகிச்­சைக்காக அனு­ம­திக்­கப்­பட்ட நிலை­யி­லேயே சிகிச்சை பல­னின்றி மர­ண­ம­டைந்­துள்ளார்.

நீதி­மன்ற பணிப்­பு­ரைக்கு அமை­வாக மர­ண­வி­சா­ர­ணையை மரண விசா­ரணை அதி­காரி நம­சி­வாயம் பிறேம்­கு­மா­ரி-னால் மேற்கொள்ளப்பட்டதைத் தொட-ர்ந்து சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்-பட்-டுள்—ள-து.

Comments
Loading...