தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ் குடாநாட்டை தாக்கிய மினி சுறாவளி..

யாழில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமாகியுள்ளதோடு , வீடுகளின் கூரைகளும் காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.

யாழ். குடாநாட்டில் நேற்று மாலை திடீரென பலத்த காற்றுடன் கடும்  பெய்த மழை பெய்துள்ளது.

 இந்த  மினி சூறாவளியால் காரைநகரில் எட்டு வீடுகள் சேதமாகியுள்ளன.

காரைநகர் கல்லந்தாழ்வு ஐந்தாம் வட்டாரப்பகுதியில் ஒரு வீடு முழுமையாக சேதமாகியதோடு நான்கு வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது

இதேவேளை  இந்த மினி சூறாவளியினால்  பொன்னாலை குடியிருப்பு பகுதியிலுள்ள மூன்று வீடுகள் சேதமாகியுள்ளதோடு  மரங்களும் முறிந்து விழுந்துள்ளதாக தெரிவிகபப்ட்டுள்ளாமை  குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...