தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ்.சாவகச்சேரியில் நிறைமாதக் கர்ப்பிணி மீது தாக்குதல்…

யாழ்.சாவகச்சேரியில், நிறைமாதக் கர்ப்பிணியின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

யாழ்.சாவகச்சேரி கெற்போலி பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் வீதியால் சென்றுக்கொண்டிருந்தபோது, வீதியில் வழிமறித்த முன்னாள் காதலன் மண்வெட்டி பிடியினால் அவரது வயிற்றில் பலமாக தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தாக்குதலுக்கு இலக்கான பெண் கதறியதையடுத்து வீதியால் சென்றவர்கள் அப்பெண்ணை மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில்   முறைப்பாடு  செய்யப்பட்டுள்ளதை அடுத்து  பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக மேலும் தெரிவிகபட்டுள்ளது.

Comments
Loading...