தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ் செல்லவுள்ள மகிந்த

இரண்டு நாள் பயணமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வரும் 12ம் திகதி யாழ்ப்பாணம் செல்லவுள்ளார். ஜனாதிபதியின் வருகையை ஒட்டி ஏற்கனவே வலி.வடக்கு பகுதிகளில் வீட்டு வேலிகள் இராணுவத்தினரால் அற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது பரவலாக பொலிஸார் ஆட்பதிவு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிவில் உடையில் வீடுகள், கடைகள், நிறுவனங்களுக்கு செல்லும் பொலிஸார் அங்குள்ளவர்களது விபரங்களை பெற்று வருகின்றனர். முன்னறிவிப்பற்ற இந்த செயற்பாடுகள் காரணமாக மக்கள் அச்சமடைத்துள்ளனர்.fence

எனினும் ஜனாதிபதியின் வருகையை ஒட்டி பாதுகாப்பு காரணங்களுக்காகவே தாம் பதிவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, அடுத்த மாதம் 12ஆம், 13ஆம் திகதிகளில் வடக்குக்கு செல்லும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அங்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 12ஆம் திகதி கிளிநொச்சியில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாவட்டச் செயலகக் கட்டடத்தை அவர் திறந்து வைப்பார். அத்துடன் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கான காணி உறுதி கையளிப்பு நிகழ்வும் ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சி பொது விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இதேபோன்று யாழ்ப்பாணத்தில் யாழ். ரயில் நிலையம் வரை ரயில் சேவையை ஆரம்பித்து வைக்கும் ஜனாதிபதி அங்கும் பல்வேறு நிகழ்வுகளில் பங்குகொள்வார்.

Comments
Loading...