Designed by Iniyas LTD
யாழ் பொங்கல் நிகழ்வுக்கு கருப்புக்கொடி போராட்டம்!
யாழ்பாணத்தில் இடம்பெறவுள்ள தேசிய தைப்பொங்கல் நிகழ்வுக்கு வருகை தரும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகான சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சனைகள் எவையும் முறையாக தீர்க்கப்படாத நிலையிலேயே தாம் இந்த போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில் யாழ் பொங்கல் நிகழ்விற்கு வருகைதரும் அவர்கள், இன்று வரை தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவில்லை. காணமல் போனவர்கள் தொடர்பாக எதுவித பதிலும் இல்லை. மக்களின் நிலங்களை மந்த கதியில் விடுவிப்பது. போர்குற்றங்கள் இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை. இராணுவ மயமாக்கல் நீக்கப்படவில்லை போன்ற கோரிக்கைகளை முன் வைத்து கருப்புக்கொடி போராட்டம் ஒன்றினை யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்துக்கு முன்பாக 13.01.2016 அன்று காலை பத்து மணியிலிருந்து 11 மணிவரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும், இதற்கு பதிக்கப்பட்ட அணைத்து சமூகத்தினரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.