Designed by Iniyas LTD
யாழ்ப்பாணம் சிறையிலிருந்து 55 தமிழக மீனவர்கள் விடுதலை
இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் இருந்த 55 தமிழக மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன பரிந்துரையின்பேரில் மீனவர்கள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்களை இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இவர்கள் நாளை தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விடுவிக்கப்பட்ட 55 மீனவர்களும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் 51 மீனவர்கள் இலங்கை சிறையில் இருக்கிறார்கள்.