Designed by Iniyas LTD
யுத்தக்குற்றசாட்டில் இருந்து தப்பிக்க ஸ்ரீ அரசின் சூழ்ச்சி!
சிறிலங்கா அரசாங்கம் அரசியல் கைதிகளை “பாதுகாப்பு கைதிகள்” என்று அரசியல் கைதிகளை அடையாளப்படுத்துவதன் ஊடாக சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சர்வதேச சட்டங்களின் நிபுணர் ஃப்ரான்சிஸ் போயல் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் இளைஞர்களும் அரசியல் கைதிகளே.
ஜெனீவா சாசனத்தின் படி யுத்தம் நிறைவடைந்த பின்னரும் அரசியல் கைதிகளை தடுத்து வைத்திருப்பது யுத்தக்குற்றமாகும்.
எனவே அவர்களை அரசியல் கைதிகள் என்று இல்லாமல், பாதுகாப்பு கைதிகள் என்று அடையாளப்படுத்துவதானது, யுத்தக்குற்றச்சாட்டில் இருந்து தப்பிக் கொள்வதற்கான சிறிலங்கா அரசாங்கத்தின் சூழ்ச்சி என்று அவர் தெரிவித்துள்ளார்.