தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ரம்மாசன் சூறாவளி புயலில் சிக்கி 97 பேர் பிலிப்பைன்சில் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸ்சில் கடந்த வாரம் வீசிய ரம்மாசன் சூறாவளி புயலில் சிக்கி 97 பேர் இறந்தனர். சீனாவையும் இந்த சூறாவளி விட்டுவைக்கவில்லை. அங்கு சூறாவளியில் சிக்கி 46 பேர் உயிரிழந்தனர். 25 பேரை காணவில்லை. இந்த நிலையில் தைவானை நேற்று புயல் தாக்கியது. பயங்கர சூறாவளி காற்று வீசியதோடு பலத்த மழையும் பெய்தது.K-01

இதனால் சந்தைகள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. சூறாவளியில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். பல இடங்களில் சேதம் ஏற்பட்டது. கடற்கரை அழகை படம் எடுக்கச்சென்ற சுற்றுலா பயணி ஒருவர் மாயமாகி உள்ளார். மீட்புப்பணிகளில் தைவான் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

Comments
Loading...